Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆழிக்குமரன் ஆனந்தன் – வல்வையின் மைந்தன்

பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014

பிரபாகரன் பிறந்த ஊரில் இன்னொமொரு ‘ஹீரோ’ என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ‘Times of India’ ஒருமுறை எழுதிய ஆழிக்குமரன் ஆனந்தன் என பொதுவாக அழைக்கப்படும் திரு வி.எஸ் குமார் ஆனந்தனின் 71 ஆவது பிறந்ததினம் கடந்த 25 ஆம் திகதி ஆகும். ஆனாலும் வல்வெட்டிதுறையில் பிறந்த இவர் பல கின்னஸ் சாதனைகளின் சொந்தக்காரர் ஆவார் என்பது இலங்கையில் பலருக்கும், குறிப்பாக தமிழர்களிற்கு தெரிந்திருக்காதவொன்று ஒரு வேதனையான விடயமாகும்.

பாக்கு நீரிணையில் தொடங்கி, மேடைகள், வீதிகள் என பயணித்து ஆவணி மாதம் 6 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டு வரை ஆங்கிலக் கால்வாயில் சாதனை முயற்சியில் இறக்கும் வரை தொடர்ந்திருந்தது இவரது சாதனை முயற்சிகள். ஒரு காலத்தில் ‘தனிமனிதனின் ஆகக் கூடிய கின்னஸ் சாதனைகளை’ என்னும் நிலையை இவர் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அரச உதவிகளோ அல்லது ஏதாவது தனிப்பட்ட அமைப்புக்களின் உதவிகள் இன்றி, இவரது தனிப்பட்ட முயற்சிக்களால் எட்டப்பட்டவை என்பதை இலகுவாக புரியவைப்பது கடினம்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் (University of London) படித்துப் பட்டம் பெற்றிருந்த இவர், இலங்கையிலும் சட்டத் துறையில் பட்டம் பெற்று மிகவும் சிறந்த கல்விப் பின்புலத்தை பெற்றிருந்தார்.

மேலும் இவர் வல்வையில் 60 களின் பிற்பகுதியில் குறிப்பிடக்கூடிய அரசியல் போராட்டத்திலும் கலந்து கொண்டதாக இவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக தமிழர்களிற்கு பெருமை சேர்த்த இவரை இதுவரை எவரும் பெரிதாக பெருமைபடுத்தியதாக காணமுடியவில்லை. சரி பிழை என

இனங்கானாது சகலதையும் பிரசுரிக்கும் விக்கிபீடியா போன்ற ஓரிரு உலக தளங்களில் இவரைப்பற்றி ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்திருந்த பலரின் ஆவணப் புத்தகங்கள் என்று சொல்லப்படுவற்றில் தவறவிடப்பட்டுள்ளார். இவற்றைப்பற்றி பெரிதாக நோக்குவது அவசியமல்ல.

ஆனால் ஆழிக்குமரன் ஆனந்தனின் பிறந்த ஊரான வல்வெட்டிதுறையில், இதுவரை இவரை அடையாளப்படுத்தும், மற்றவர்களிற்கு இவரைப்பற்றி இவரின் சாதனைகள் பற்றித்  தெரியப்படுத்தும் வகையில் எந்தவொரு நிரந்தர அடையாளங்களும் இடம்பெறவில்லை என்பதும், இவரின் சாதனைகள் மற்றும் சாதனை முயற்சிகள் பற்றி தற்போதைய வல்வையின் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதும் கவலை தரக் கூடியவையாகும்.

இவைகளே ஆழிக்குமரன் ஆனந்தன் புகழ் மங்குவதற்கு காரணம் என்று சொல்ல முனைவது தவறு. எத்தனைதரம் கீழே விழுந்தாலும் உடையாமல் பாவித்த ‘Nokia’ கைத்தொலைபேசிகள் எவ்வாறு ‘Samsung’ களின் வரவால் அடிபட்டுப்போனதோ, அதேபோல் 70 களில் வல்வையில் உருவாகி 80 களில் சுழல்பெறத் தொடங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இவைகளின் ஸ்தாபகர்களான திரு.தங்கத்துரை, திரு.குட்டிமணி மணி, திரு.பிராபகரன் ஆகியோர்களின் பெயர்கள் தொடர்ந்து நீடித்திருந்த அரசியல் மற்றும் உள்நாட்டுப் போரினால் உலகம் பூராவும் வியாபிக்க, ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயர் இயல்பாகவே அடிபட்டுப் போனதுதான் உண்மை. மேலும் திரு.ஆனந்தன் அவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தில் மணம் முடித்திருந்ததும் இன்னுமொரு காரணமாக அமையக்கூடும்.

இப்பத்தியை எழுதும் எம்மால், 1992 ஆம் ஆண்டு வல்வையில் திரு.ஆனந்தனை ‘அலைஓளி’ என்னும் கையெழுத்து சிறப்பித்து நினவுகூர்ந்தது போன்ற சிறு சம்பவங்கள் கூட இதுவரை நிகழ்ந்திருக்கவில்லை (ஏதாவது நிகழ்ந்திருந்தால் மன்னிக்கவும்) என்பதே மேற்கூறியவற்றிகு சான்று பகிர்கின்றன.

எது எப்படியோ ஆழிக்குமரன் ஆனந்தனின் புகழ் மீண்டும் நாட்டப்படவேண்டும். இதற்கு முதற்படியாக இவருக்கு வல்வையில் ஒரு சிலை எடுக்கப்படவேண்டும். ஒரு சிலையைப் போல் ஒரு செய்தியை நிரந்தரமாக சொல்லக் கூடிய வேறு ஒன்றும் மாற்றாக இல்லை என்பது உண்மை. அவ்வப்போது இங்கு வல்வையில் சிலை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது உண்மையாயினும் இதுவரை இது சாத்தியப்படவில்லை.

இதற்கு 2 காரணங்கள்தான் இருக்கக்கூடும். ஒன்று தடங்கல்கள் அல்லது இந்த முயற்சியை ஆரம்பித்து முடிக்கக்கூடிய தனிநபரோ அல்லது அமைப்போ இல்லை என்பதுதான். பொதுவாக சிக்கலாக இருக்கக் கூடிய பணம், இந்த விடயத்தில் சிக்கலாக இருக்கும் என்று சொல்லுமளவிற்கு இல்லை. ஏனெனில் இதற்குரிய பணம் திரு.ஆனந்தனின் குடும்பத்தினருக்கு ஒரு பொருட்டாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

காரணத்தைக் களைந்து வல்வையின் நலனில் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள், வல்வையின் மைந்தனுக்கு விரைவில் ஒரு சிலை எழுப்ப வேண்டும். இந்தக்காலத்தில் இது தவறினால், இனிவரும் காலங்களில் இதற்குரிய சாதியங்கள் குறைந்தே இருக்கும்.


 


பிந்திய எமது தலையங்கம்:
தூபியடி - (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2018 (புதன்கிழமை)
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
முயற்சிகளின் மகுடம் (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2015 (சனிக்கிழமை)
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)
75 ஆண்டுகால மைதானத்தை நாம் தக்க வைக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வியக்கதகு வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2014 (புதன்கிழமை)
வல்வை ரேவடிக் கடற்கரை - ஒரு முன்மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2014 (செவ்வாய்க்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
Brilliant People
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2014 (சனிக்கிழமை)
பிரபாகரன் பிறந்த ஊரில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
மழை நீரை ஏந்துவோம் - எமது தலையங்கம் 10
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2013 (செவ்வாய்க்கிழமை)
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)
சிங்களவரும் அறியட்டும் - எமது தலையங்கம் 7
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013 (புதன்கிழமை)
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை - எமது தலையங்கம் - 3
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013 (வியாழக்கிழமை)
கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai