Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8

பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் 
 
வல்வெட்டித்துறை - பல வரலாறுகளைக்கொண்டது. 
 
புராதனம், இந்துத்துவ மரபுகள், நீண்ட அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள், கப்பல் கட்டுமானம், கடல் வாணிபம், கப்பல் தொழிலில் ஆதிக்கம், ஆன்மிகம், கலை இலக்கியம் மற்றும் நாடகத்துறை, விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் மற்றும் அதன் தலைவர்கள், கல்விமான்கள், கின்னஸ் வீரர் ஆனந்தன், பல்வேறுபட்ட விழாக்கள், தற்காப்புக் கலைகள், தென் இந்தியாவுடனான தொடர்பு, இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளூடானான தொடர்பு, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள், ஏராளமான ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், உணவுப் பழக்கங்கள், புனைபெயர்கள்...... இப்படி மிக மிக நீளமானது விடையங்களைக் கொண்டது வல்வெட்டித்துறை. இவற்றுடன் தற்பொழுது புலம்பெயர் வல்வையர்களின் பல்வேறுபட்ட வளர்ச்சிகளும் அடக்கம். இவையொன்றும் மிகைப்படுத்தப்பட்டவொன்றல்ல.
 
இவ்வாறு வல்வையை அடையாளப்படுத்துவதற்காக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன, நடைபெற்றுவருகின்றன. இதில் பலவேறு வாதங்களும் அடக்கம். வாதப் பிரதிவாதங்களுக்கு நாடாளுமன்றங்களும் விதிவிலக்கல்ல.  விமர்சனங்களுக்கு நவநீதம்பிள்ளை அம்மையாரும் தப்புவதில்லை.
 
விடயத்துக்கு வருவோம் 
எமது இணையதளத்தை நாம் தொடங்கியதிலிருந்து பலர் கருத்துகள் (Comments) பகுதியையும் சேர்க்கச் சொல்லிவந்திருந்தனர். இவ் இணையதளத்தில் வல்வையின்பால் அக்கறையுள்ள அனைவரினது பங்களிப்பையும் உறுதி செய்வதில் நாம் மிகவும் கவனமாகவுள்ளோம். ஆகவே நாம் சிறிது தயங்கியிருந்தாலும் பலரின் நல்வேண்டுதலின் பேரில் கருத்துகள் பகுதியை ஆரம்பித்திருந்தோம்.
 
கருத்துகள் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்து, பல்வேறு விடையங்களை பலரும் அறிய வழிவகுக்கும். 
 
கருத்துகள் எனவரும் பொழுது புகழ்ச்சி தரும் கருத்துகளை மாத்திரம் எதிர்பார்ப்பது தவறு. விமர்சனங்களை தாங்கிவரும் எதிர்பார்க்கப்படவேண்டியவொன்று.
 
தவிர்க்கப்படவேண்டும்
ஆனாலும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் CWN (Children Well Wishers Network) சிதம்பரக் கல்லூரியில் செய்ய உத்தேசித்துள்ள ஒரு பணி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. பல இணையதளங்களில் இதைவிட பாரதூரமான கருத்துகள் வந்துகொண்டிருந்தாலும், எமது இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட செய்தியில் இடம்பெறுள்ள கருத்துகள் பற்றி பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது கருத்துகளில் (எல்லாவற்றிலும் அல்ல) பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப்பிரயோகங்கள் பற்றி. 
 
அதாவது கருத்துகளில்  பாவிக்கப்படும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமானவையாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட செய்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். தனிநபர் பிரச்சனைகள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படக் கூடாது. இதுதான் ஆரோக்கியமகவிருக்கும். அத்துடன் எமது மற்றும் உங்கள் நோக்கமான 'பொதுவான வல்வெட்டித்துறையின்' முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். 
 
நாம் கருத்துகள் (Comment) எழுதுவதை நிறுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் எழுதப்படும்  கருத்துகள் இன்னும் மெருகூட்டப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம், நாகரீகமானவையாக இருக்கவேண்டும்.
 
நாம் 
குறிப்பிட்ட செய்தி உட்பட சிலவேறு செய்திகள் மற்றும் சில கருத்துகள் பிரசுரிப்பின் பின்னர், எமக்கு பல்வேறு சாதுவான அழுத்தங்கள் பிரயோக்கிக்கப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன. செய்தியப் போடு....., செய்தியை எடு....., Comment ஐப் போடு.....Comment ஐ எடு..... 
 
சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒன்றும் கிள்ளுக் கீரைகளும் அல்ல, அன்னக் காவடிகளும் அல்ல. நாம் சகல வழிகளிலும் ஒரு பலமான நிலையில் நின்றே இவ் இணையதளத்தையும், இதனுடன் சம்பந்தப்பட்ட சமுதாயப்பணியையும் முன்னெடுத்துள்ளோம். அறிவுரைகளை கண்டிப்பாக வரவேற்போம், மாறாக அழுத்தங்களையல்ல. எம்மை எவரும் தங்களுக்கு ஏற்றவகையில் மட்டும் செயற்படவைக்க முனைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை. நாம் எல்லோருக்காகவுமே சமநிலையில் நின்று செயற்பட முயற்சிக்கின்றோம்.
 
இவ் இணையதளம் எவருக்கும் சார்பாகச் செயற்படாது, அதேநேரம் எவரையும் புறம் தள்ளவும் மாட்டாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். பொதுவான வல்வெட்டித்துறை என்ற கொள்கையில் எல்லோரும் பணிபுரிவோம். 
 
வருத்தம் தெரிவிக்கின்றோம் 
ஆனாலும் எமது சில தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக கடந்த நெடியகாடு விளையட்டுக்கழக இறுதி நிகழ்வுகளில் விருந்தினர்களில் ஒருவராக வருகை தந்திருந்த வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்களின் பிரசன்னம் பற்றி பிரஸ்தாபிக்கப்படவில்லை என சில வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை வேண்டும் என்று நிகழ்பவையல்ல. பொதுவாக உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களின் அடிப்படையில் செய்திகள் எழுதப்படுவதானாலும், செய்திகள் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்டோரால் பதிவேற்றப்படுவதாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
 
இயன்றவரை எமது தவறுகள் திருத்தப்படும். தொடர்ந்தும் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை அனுப்புவீர்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.
 
Editor
Valvettithurai.org

 


 


பிந்திய எமது தலையங்கம்:
தூபியடி - (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2018 (புதன்கிழமை)
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
முயற்சிகளின் மகுடம் (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2015 (சனிக்கிழமை)
வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)
75 ஆண்டுகால மைதானத்தை நாம் தக்க வைக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வியக்கதகு வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2014 (புதன்கிழமை)
ஆழிக்குமரன் ஆனந்தன் – வல்வையின் மைந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014 (புதன்கிழமை)
வல்வை ரேவடிக் கடற்கரை - ஒரு முன்மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2014 (செவ்வாய்க்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
Brilliant People
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2014 (சனிக்கிழமை)
பிரபாகரன் பிறந்த ஊரில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
மழை நீரை ஏந்துவோம் - எமது தலையங்கம் 10
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2013 (செவ்வாய்க்கிழமை)
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
சிங்களவரும் அறியட்டும் - எமது தலையங்கம் 7
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013 (புதன்கிழமை)
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை - எமது தலையங்கம் - 3
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013 (வியாழக்கிழமை)
கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai