Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015

பல விடயங்களில் முன்னோடியாகத் திகழும் வல்வையர்கள் நாம் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியிலும் எமது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளோம்.  

60 ற்கு மேற்பட்ட பட்டங்கள், ஒன்று இரண்டைத் தவிர அனைத்தும் முப்பரிமாணம் கொண்டவை. முப்பரிமாணத்திலும் பல வளைவுகளையும் வடிவுகளையும் வர்ணங்களையும் கொண்டமைந்திருந்தன வானில் பறந்த பட்டங்கள்.

அனைத்துப் பட்டங்களிலும் கலை நயம், நுட்பம் அதிகமே பயன்படுத்தப்பட்டிருந்தன. எமது முன்னோர்களின் வீரத்தை எடுத்தியம்ப அன்னபூரணி பாய் கப்பல் பட்டமும், எம்மால் இயலும் என்று காட்ட 'Yes' என்ற பட்டமும், வீதியில் ஓடும் வாகனத்தை வானில் ஓட்டிட 'Land Master' பட்டமும்............. இப்படியாக ஒவ்வொரு பட்டமும் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக காதலின் சின்னம் தாஜ் மஹால் வானில் பறந்தது பட்டப் போட்டிக்கு மேலும் ஒரு மகுடம்.

ஒரு போட்டியாளரின் பட்டத்தைப் போல மற்றவரின் பட்டம் இருக்கக் கூடாது என்பதில் அனைத்துப் போட்டியாளரும் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர் போலும்.

பலரின் கலைத்திறன், நுட்பம், அறிவு, உழைப்பு...........என பல விடயங்களையும் தாங்கியிருந்தது இந்த பட்டப்போட்டி. அனைத்துப் போட்டியாளர்களும் இந்தப் போட்டியின் கதாநாயகர்கள் என்றால் மிகையாகாது.

வல்வெட்டித்துறைக்கு பெருமை சேர்த்த இந்த நிகழ்வு இதன் ஏற்பாட்டாளர்கள் - வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையத்தினரையே சாரும். கடற்கரையை அழகு படுத்தியதிலிருந்து, தகுந்த விருந்தினர்களை அழைத்து, நிகழ்வை உரிய நேரத்தில் தொடக்கி விழாவை சிறப்பாக நடாத்திமுடித்திருந்தனர்.

மேலும் எதுவித சர்ச்சைக்கும் இடமளிக்காத தீர்ப்பைக் கூறும் வண்ணம் சிறந்த நடுவர்களையும் நிகழ்வில் சேர்த்திருந்ததும் பாராட்டத்தக்கது.

இதற்கும் மேலாக நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் சிறந்த தமிழ் நயம் மிக்க அறிவிப்பாளரின் அறிவிப்பும் பட்டங்களுடன் சேர்ந்தே வானில் பறந்துகொண்டிருந்தது.

தினக்குரல் பத்திரிக்கையின் ஊடக அனுசரணையும், Hutch இனுடைய விளம்பர அனுசரணையும் நிகழ்வை மேலும் ஒரு படி கொண்டுசென்றுள்ளது.

முழு நிகழ்வும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதும், இதனை பலர் நேரடியாகப் பார்த்திருந்ததும் மேலும் சிறப்பு. 

பட்டப் போட்டி பற்றி 'மேக்க லஸ்ஸனாய்....', It is a brilliant job..., மிகச்சிறப்பு..... என 3 மொழிகளிலும் எமது Face book முகநூலில் கருத்துப்பகிர்வும் பட்டங்களை பல இனத்தவரும் ரசித்ததற்கு அடையாளம். 

கடந்த வருடத்தை விட பார்வையாளர் கூட்டம் இந்த முறை அதிகம் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இவ்வாறனதொரு Copy அடிக்கப்படாத, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழாத ஒரு நிகழ்விற்கு இதுதானா பார்வையாளர் கூட்டம் என்றால் - நிச்சயம் இதுவல்ல.

போட்டி ஏற்பாட்டாளர்கள் இதனை கவனத்தில் எடுத்து அடுத்த வருடம் இன்னும் பல ஆயிரம் பார்வையாளர்களை இந்த பட்டப்போட்டியைக் காண வழிசமைக்க வேண்டும்.

மேலும் விருந்தினர் உரையில் விருந்தினர் குறிப்பிட்டதுபோல் விழா ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்விற்கு நல்லதொரு தலையங்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தீட்டுவது மிகவும் அவசியமானதொன்று. ஏனெனில் இன்றைய இலத்திரனியல் ஊடக உலகில் உலகின் பல பாகங்களிலும் உள்ள பலரிடம்  ஒரு நிகழ்வை கொண்டு செல்வதற்கு இவை அவசியமானவை.

ஆனாலும் வியப்பான ஒரு விடயம் என்னவெனில், இவ்வாறனதொரு நிகரற்ற ஒரு நிகழ்விற்கு, நிகழ்வு முடிந்த உடன் யாழின் பிரதான ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவானதாகத் தெரியவில்லை. 

வல்வை சார் இணையதளங்களாலும், Face book போன்ற சமூக வலைத்தளங்களாலும் நிகழ்வு அன்றே பலரை எட்டியது என்பது வேறு விடயம்.

 4 புகைப்படக்காரர்கள் (ஒருவர் விநாயகர் முகூர்த்தங்கள் சேர்க்கும் நிகழ்வை படம் பிடித்திருந்தார்), 3 Editors, நேரடி ஒளி பரப்பை ஒழுங்குபடுத்த ஒருவர் என எங்களிலும் எண்மர் சுமார் நள்ளிரவு வரை பட்டப் போட்டி நிகழ்வின் செய்தியை பிரசுரிக்கும் அளவிற்கு இந்த நிகழ்வு மிகவும் கனமாகவே இருந்தது.  

எமக்கு தகுந்த அனுசரணை வழங்கிய விழாவின் ஏற்பாட்டாளர்களான வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையத்தினருக்கு இத்தருணத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்  

அடுத்த வருடம் இதைவிடவும் சிறந்த ஒரு பட்டப் போட்டி நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.


 


பிந்திய எமது தலையங்கம்:
தூபியடி - (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2018 (புதன்கிழமை)
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
முயற்சிகளின் மகுடம் (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2015 (சனிக்கிழமை)
75 ஆண்டுகால மைதானத்தை நாம் தக்க வைக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வியக்கதகு வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2014 (புதன்கிழமை)
ஆழிக்குமரன் ஆனந்தன் – வல்வையின் மைந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014 (புதன்கிழமை)
வல்வை ரேவடிக் கடற்கரை - ஒரு முன்மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2014 (செவ்வாய்க்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
Brilliant People
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2014 (சனிக்கிழமை)
பிரபாகரன் பிறந்த ஊரில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
மழை நீரை ஏந்துவோம் - எமது தலையங்கம் 10
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2013 (செவ்வாய்க்கிழமை)
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)
சிங்களவரும் அறியட்டும் - எமது தலையங்கம் 7
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013 (புதன்கிழமை)
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை - எமது தலையங்கம் - 3
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013 (வியாழக்கிழமை)
கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai