ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகப் பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2018 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாக முதற் கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக நீச்சல் தடாகம் அமையவுள்ள முன்னாள் சுங்கப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மிகவும் கோலாகலமாக இந்த வருடம் மே மாதம் 26 ஆம்திகதி இடம்பெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர, முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கீழே படங்களில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள முதற்கட்டப் பணிகளின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.