பூமியின் கடல் மட்டம் (Global sea level) வருடந்தோறும் ஒரு நிலையான அளவில் உயரவில்லை எனவும், இது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Researchers at University of Colorado இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கடல் மட்டம் வருடம் ஒன்றுக்கு 0.0.8 மில்லிமீட்டர்கள் அதிகரிக்கின்றது எனவும் இந்த அதிகரிப்பு 2100 ஆண்டில் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தாட்டிக்காவின் (Antarctica) கிரீன்லாந்து (Greenland) பனிப்பகுதி வேகமாக உருகிவருவதே இதற்குப் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கும் வேகத்தில் கடல் மட்டம் உயருமானால் 2100 ஆம் ஆண்டளவில் கடல்மட்டம் 65 சென்டிமீட்டர்கள் வரை உயரும் என்றும் இது கரையோர பிரதேசங்களுக்குப் பாரிய பாதிப்பை உண்டு பண்ணும் என்றும் PNAS என்னும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.