பெண்களுக்கான இலவச யோக பயிற்சிகல் வல்வையில் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றது. இந்தியாவின் தமிழகத்தில் யோகா கலை பயின்ற திருமதி சியாமளா சிவநேசன் என்பவரினால் குறித்த பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
வல்வை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்று வரும் யோகா பயிற்சியில் 14 வயது முதல் 70 வயது வரையானோர் சுமார் 15 பெண்கள் இப்பொழுது பயின்று வருகின்றனர்.
பயிற்சிகள் ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இடம்பெறுகின்றது. இந்த இலவச யோகா பயிற்சியை பயில விரும்புவோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பயிற்றுவிற்பாளர் திருமதி சியாமளா சிவநேசன் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.