கடந்த அன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பாரிய தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் பகுதியாக மூழ்கிய X-Press Pearl கப்பலின் எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கப்பலின் உரிமையாளர்களான X-Press Feeders, Shanghai Salvage Company (SCC) என்னும் நிறுவனத்துடன் எஞ்சிய பகுதிகளை அகற்றுவதற்குரிய (Removal of the wreck) ஒப்பந்தத்தில் கை எழுத்து இட்டுள்ளது.
இதேவேளை இலங்கை அதிகாரிகள் இரண்டாவது இழப்பீட்டுக்கான கோரிக்கை ஒன்றை முன்வைத்துளனர் என்றும் அக்கோரிக்கையானது, கப்பல் நிறுவனத்தின் காப்புறுதிகளை கவனிக்கும் P&I Club இனால் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.