✅கால்நடை மருத்துவத் துறை என்பது வெறும் கால்நடைகளின் மருத்துவம் தொடர்பான துறை மட்டுமல்ல.
✅அது மனித சமுதாயத்துக்கான உணவு உற்பத்தி மற்றும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் செயல்படும் துறை.
✅மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உணவு உற்பத்தி மேம்பாட்டுக்காகவும் இத்துறை செயல்படுகிறது.
✅பால், முட்டை, இறைச்சி உள்ளிட்ட மனித சமுதாயத்துக்கு தேவையான முக்கியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் கால்நடைத்துறையின் பங்கு மிக முக்கியமானது.
✅அதுமட்டுமின்றி, கால்நடைகள் வேளாண்துறைக்கு ஆற்றும் சேவைகள் அனைவருக்கும் தெரியும்.
✅ஆகவே வேளாண்மை, உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் மனித நலன் ஆகிய அனைத்துக்கும் அளப்பரிய பங்காற்றுவது கால்நடை மருத்துவத்துறை ஆகும்.
✅கால்நடை மருத்துவத் துறையின் பணிகளை பொதுமக்களுக்கு பரவலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் உலக கால்நடை மருத்துவ சங்கம் மற்றும் பன்னாட்டு விலங்குகள் நல சங்கம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் #ஏப்ரல்மாதம் #கடைசிசனிக்கிழமை யை உலக கால்நடை மருத்துவ தினமாக அனுசரிக்க முடிவெடுத்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
✅உலக கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்சல்ஸ் நகரில் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.