உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு வருகிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2021 (திங்கட்கிழமை)
உலகின் தற்போதைய பாரிய கொள்கலன் கப்பலான Ever Ace தனது முதலாவது கடற்பயணத்தில் (Maiden voyage) ஒரு துறைமுகமாக நாளை கொழும்பு வருகிறது. தாய்வானின் Evergreen நிறுவனத்துக்கு சொந்தமான Ever Ace, 23,992 இருபது அடி கொள்கலன்கள் காவக்கூடிய இக்கப்பலின் நீளம் 400 மீட்டர் அகலம் 61.5 மீட்டர் ஆகும்.
ஆனாலும் நீளம் 400 மீட்டர் மற்றும் அகலம் 61.5 மீட்டர் உடைய கொள்ளளவில் 23,800 தொடக்கம் 23,955 கொள்கலன்கள் உடைய சுமார் நூறு கப்பல்கள் ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி Ever Ace இன் கொள்ளளவை மிஞ்சும் கொள்கலன்கப்பல்கள் இன்னும் சில மாதங்களில் சேவையில் ஈடுபடவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.