நாட்டின் சகல பாகங்களிலும் நேற்றிலிருந்து நிறுவை அளவீடு (Weighing Scale) சகல சில்லறை கடைகளிலும் அவசியமாக்கப்பட்டுள்ளது. Consumer Affairs Authority (CAA) வெளியிடுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் பிரகாரம், சகல வர்த்தகர்களும் “Measurement Units Standards and Services Department” ஆல் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிறுவை அளவீடு ஒன்றினை
பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் பொருட்களை வாங்க முன்னர் அவற்றின் உரிய நிறைகளை தெரிந்துகொள்ளமுடியும் என்றும் நுகர்வோர் தொடர்ந்தும் நிறை குறைந்த பொருட்கள் வாங்கும் பட்சத்தில் புகார் செய்யமுடியும் என்றும் CAA இன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.