நேற்று கனடாவின் 42 ஆவது ஒண்டாரியோ மாநில பொதுத் தேர்தலில் (42nd Ontario general election) இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜய் தணிகாசலம் என்னும் இளைஞர் போட்டியிட்டார்.
Ontario PC Party (Progressive Conservative Party of Ontario) சார்பில் போட்டியிட்ட Toronto Scarborough வின் Rouge Park தொகுதியில் இவர் 963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பூர்வீமாகக் கொண்ட திரு.தணிகாசலத்தின் மகனும், குச்சம் ஒழுங்கையைச் சேர்ந்த விஸ்வலிங்கம், அஸ்டலட்சுமி மற்றும் வல்வை சிவபுர வீதியைச் சேர்ந்த பெரியதம்பி, கமலா ஆகியோரின் பேரனும் ஆவார்.
குறித்த தேர்தலில் Ontario Libaral party சார்பில் போட்டியிட்ட Sumi Shan என்பவரும் இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட ஒரு தமிழ் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: June 11, 2018 at 04:52
எனது பாடசாலைத் தோழன் தணிகாசலம்.. எனது மதிப்பிற்குரிய ஆசிரியை கமலா பெரியதம்பியின் பேரன் இவர் என்பதறிந்து எல்லையில்லாத ஆனந்தமடைகிறேன்.. வாழ்க பெருமை..! வெற்றிபெற தவறினாலும் இரண்டாவது இடம் பெற்ற போட்டியாளரையும் வல்வை வாழ்த்துகிறது..
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 09, 2018 at 04:43
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.