வடமராட்சியின் மூத்த கணித ஆசான் இராஜரட்ணம் கெளரவிக்கப்பட்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2017 (புதன்கிழமை)
சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. ஒய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறைத் தலைவர் ச.சு.சிவகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சியின் மூத்த கணித ஆசான் திரு.இராஜரட்ணம் கெளரவிக்கப்பட்டார்.
90 வயதான திரு.இராஜரட்ணம் அவர்கள், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியர் ஆவார். சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் பல ஆயிரம் மாணவர்களுக்கு இவர் கணிதம் போதித்துள்ளார். இவரிடம் கணிதம் பயின்ற ஏராளமானோர் உலகின் பல பாகங்களிலும் கணிதம் சார் துறைகளில் சிறப்புடன் பணியாற்றிவருகின்றனர்.
இவர் 80 களின் நடுப்பகுதிகளில் வல்வையில் இயங்கியிருந்த தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றான நவீன கல்வி நிலையத்திலும் (Modern Study centre) கணிதம் போதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதைவிட பருத்தித்துறை Modern Study centre உட்பட்ட இதர சில தனியார் கல்வி நிலையங்களிலும் கணிதம் போதித்திருந்தார்.
ஆசிரியர் திரு.இராஜரட்ணம் அவர்கள் தற்பொழுதும் தனது பருத்தித்துறை சொந்த இல்லத்தில் வசித்துவருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஆ.ஞானகுமார் (Germany)
Posted Date: April 16, 2018 at 21:41
இராஜரட்ண மாஸ்டரிடம் கல்வி கற்ற மாணவருள் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன். அறுபதுகள் அப்போது கல்வியும் ஒழுக்கமும் உயர்ந்திருந்த காலம். இவரின் கற்பித்தற் திறனும் ஒழுக்கக் கட்டுப்பாடும் மெச்சத்தக்கது.ஒன்றை மட்டும் சொல்வதானால் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவ்வாரப் பரீட்சை அதில் பத்துப்புள்ளிக்கு ஒன்பது எடுத்தால் ஒரு அடிமட்ட,எட்டு என்றால் இரண்டு இப்படி புள்ளி குறைய அடி கூடும் . இப்படியாக அவரிடம் கணிதம் படித்து பாண்டித்தியம் பெற்றோம்
kuha kumaran (United Kingdom)
Posted Date: April 19, 2017 at 22:51
Dear Raja Ratnam master, your punishments and criticism have been more important because they have made us what we’re today. Thanks for going out of your way and teaching us life’s lessons which we would have never learnt from textbooks. You made Mats likable and goals achievable. Gratitude from every friends from all around the World.
k.s.thurai (Denmark)
Posted Date: April 19, 2017 at 20:26
இராஜரட்ணம் மாஸ்டரும் நானும் எண்பதுகளில் பருத்தித்துறை மொடேண் கொமேசில் சில காலம் ஒன்றாக படிப்பித்துள்ளோம், அத்தருணம் அவருடைய இனிய பண்புகளை இன்றும் மனதில் இருத்தி வைத்துள்ளேன்.
மாணவர்களை சரியாக அவதானித்து அவர்களுக்கு ஏற்ற முறையில் சொல்லிக்கொடுப்பார், அவரோடு சேர்ந்து அக்கால ஹாட்லிக்கல்லூரியின் மிகச்சிறந்த மாணவர்களை சந்தித்தது எனது அறிவின் கூர்மைக்கு பெரும் துணை புரிந்தது..
எல்லோருடனும் கீழிறங்கி பழகும் சிறப்பை பெற்ற ஆசான் அவர்.. அவர் போல கீழ்ப்படிவுடன் வாழ்ந்த சக ஆசிரியர்களை அவருக்கு இணையாக காட்ட முடியுமா என்று தேடுகிறேன் கிடைக்கவில்லை..
அன்று இளம் ஆசிரியராக புதிய இரத்ததுடன் பாடசாலைகளை திருத்த பாடுபட்டபோது பழைய ஆசிரியர்களால் பட்ட துயர் கொஞ்சநஞ்சமல்ல.. அத்தகைய பழைய பஞ்சாங்களில் இருந்து வேறுபட்டு மாற்றங்களை ஏற்கும் பண்பு இராஜரத்தினம் மாஸ்டரிடம் இருந்தது.
இளம் ஆசிரியர்களை மதித்து வரவேற்ற மகத்தான ஆசிரியர்..
அவர் நூறாண்டு காண வாழ்த்துகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.