வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வருடாந்த பொங்கல் விழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. திருவிழாவில் பங்கெடுக்க ஏரளாமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.
நேற்று மாலை அடியார்களுடன் நேர்த்தியுடன் ஆரம்பித்திருந்த விழா இன்று காலை பிரத்தியேகமான பொங்கலுடன் நிறைவடைந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் பொங்குதல், பாற்செம்பு மற்றும் காவடி எடுத்திருந்தனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆனது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ளது. இயற்கை வளங்கொழிக்கும் சூழலை தன்னகத்தே கொண்டுள்ள இவாலயத்திற்கு வடக்காகவும் கிழக்காகவும் நந்திக்கடல் நீரேரித் தீர்த்தம் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.