முல்லைதீவு வற்றாபளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா – மேலதிக படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014 (புதன்கிழமை)
நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்திருந்த பிரசித்திபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல்திருவிழா நேற்றுக் காலை முடிவடைந்துள்ளது. இந்த திருவிழாவில் எதிர்பாரத்தது போலவே ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவின் நந்திக்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
குறித்த இந்தப் பகுதிகள் முன்னர் தமீழீழ விடுதலை புலிகளின் கோட்டையாகக் கருதப்பட்டதுடன், இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின் இறுதி சமரும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இப் பகுதிகளிலேயே நடை பெற்றிருந்ததும் இங்கு நினைவுகூறத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.