புராதனம், இந்துத்துவ மரபுகள், நீண்ட அரசியல், கப்பல் கட்டுமானம், கடல் வாணிபம், கப்பல் தொழிலில் ஆதிக்கம், ஆன்மிகம், கலை இலக்கியம் மற்றும் நாடகத்துறை, விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் மற்றும் அதன் தலைவர்கள், கல்வி மான்கள், உலகப் புகழ் வீரர்கள், பல்வேறுபட்ட விழாக்கள், தற்காப்புக் கலைகள், தென் இந்தியாவுடனான தொடர்பு, இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளூடானான தொடர்பு, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள், ஏராளமான ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள் இப்படி மிக மிக நீளமானதும், ஆவணப்படுத்துவதில் சிக்கல்களையும் கொண்டுள்ளது வல்வெட்டித்துறையின் நெடிய வரலாறு.
இவ் நெடிய வரலாற்றை இணையத்தில் ஆவணப்படுத்த நாம் எடுத்திருக்கும் முயற்சிக்கு சம்பந்தப்பட்ட அனைவரது பங்களிப்பும் வரவேற்கத்தக்கது.
படம் - வல்வெட்டித்துறை வண்ணாத்திமணல் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய நினைவுத் தூபி