வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 04.06.2014 அன்று ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை 0800 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி 0930 மணியளவில் சித்திரத்தேரில் ஏறி வலம்வந்தார். அதன்பின்னர் 1200 மணியளவில் பஞ்சமுக அர்ச்சனையும் நடைபெற்றது.
பத்து தினங்களாக நடைபெறும் இவ்வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நாளை 13.06.2014 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 0530 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து 0830 மணியளவில் சுவாமி ஊறணி தீர்த்தக்கடற்கரையை சென்று அங்கு தீர்த்தமாடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (15.06.2014) பூங்காவனமும், வெள்ளிக்கிழமை (20.06.2014) கற்பூரத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
சுவாமி சித்திரத்தேரில் ஏறிவரும் காட்சியினை படங்களில் காணலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.