வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நேற்று 04 ஆம் திகதி காலை இடம்பெற்றது. நேற்றுக் காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தீர்த்தோற்சவத்திற்காக ஊறணி தீர்த்த கடற்கரை சென்றடைந்து, ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்தோற்சவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயிலை வந்தடைந்து திருச்சிற்பல பிள்ளையார் கோயிலில் தங்கி, பின்னர் இரவு தன் கோயில் நோக்கித் திரும்பினார்.
கீழே படங்களில் முருகப்பெருமான் ஊறணி தீர்த்தக்கடற்கரை நோக்கி செல்வதையும், தீர்த்தமாடுவதையும், அதன்பின் சிறப்புப் பூசைகள் இடம்பெறுவதையும் காணலாம்.
தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் நடைபெறுவந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.