10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வாழிய உன் சேவை தொடரட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2021 (புதன்கிழமை)
வாழிய உன் சேவை தொடரட்டும்
பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் எங்கும் பரந்து வாழும் வல்வையர்கள் பார்த்து மகிழும் ஒரே இணையம் ஓஆர்ஜி. உலகச்செய்திகளையும், ஊரின் பாரம்பரிய நிகழ்வுகளையும், துயர்பகிர்வு செய்திகள், மங்கல நிகழ்வுகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்துவதில் ஓஆர்ஜி என்றும் பின் நின்றது இல்லை.
ஆதவன் பக்கம் பல மக்களை கவர்ந்துள்ளது. ஊரின் முன்னேற்றத்திற்காக குறை நிறைகளை சுட்டிக்காட்டுவது நல்ல விடயம். அதில் எமது பேச்சுத் தமிழும் இடம் பிடித்து இருக்கும். சுவாரசியமாகவும் இருக்கும்.
ஊரில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் எப்போ தொடங்கும் என்பதை தைமாதம் பிறந்தவுடன் பார்த்து அறிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும். இப்படி பல செய்திகளை ஓஆர்ஜி காணக்கூடியதாக இருக்கும்.
ஓஆர்ஜி பத்தாண்டுகள் அல்ல இன்னும் பற்பல ஆண்டுகள் உங்கள் சேவை தொடர வாழ்த்தி அதனை வழி நடத்தும் நிர்வாகத்தினர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.