இன்று 18 ஆம் திகதியில் 7 ஆவது ஆண்டில் தடம் பாதிக்கின்றது எமது இணையதளம். 2012 ஆம் ஆண்டு இதே நாள் 18 ஆம் திகதியன்று அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்ட பணிகளை தளராது செய்து வருகின்றது.
தொடர்ந்தும் இடைவிடாது இத்தளம் நடுநிலைமையுடன், பிரதேசத்தின் வளர்ச்சியையும் பெருமையையும் முன்னிறுத்தி பயணிக்கும்.
தொடர்ந்து எமக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: October 19, 2018 at 10:24
எழாவது வருடத்தை ஆரம்பித்துள்ள உங்கள் இணையதளத்தை தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துவதோடு, உங்கள் தொழில் மற்றும் பல வேலைகளுக்கு மத்தியில் தினமும் செய்திகளைத் தருபவர்களையும் துணைநிற்பவர்களையும் பாராட்டுகிறோம்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம், கனடா.
குமுதினி (இலங்கை)
Posted Date: October 18, 2018 at 20:38
ஏழாவது ஆண்டில் கால் பதிக்கும் valvai.orgக்கு மனமார்ந்த வாழ்த்துக்ளைத் தெரிவிப்பதுடன் மேன்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: October 18, 2018 at 20:14
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க அறத்தின் வழி மென்மேலும் சிறந்து வளர்க .
Thurailingam (UK)
Posted Date: October 18, 2018 at 12:13
வல்வை பற்றிய செய்திகள் மாத்திரமல்லாது வேறு பல சிந்திக்கவைக்கும் செய்திகளையும் குறிப்பாக கப்பற்றுறை பற்றியும் வெளிவிடுவதில் முன்னேற்றம் கண்டு வரும் வல்வெட்டித்துறை.org ஏழாவது ஆண்டில் கால் பதிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.
தொடர்ந்தும் வல்வையர்கள் மாத்திரமல்லாது இலங்கைத் தமிழர்களும் சிந்திக்கக் கூடிய முன்னேறக்கூடிய செய்திகளையும் தகவல்களையும் வெளிவிட வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன். வாழ்க.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.