வல்வை இளைஞன் தேசிய மட்ட குத்துச் சண்டைப் போட்டிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2018 (வெள்ளிக்கிழமை)
வடக்கு மாகாணத்திற்குட்பட்ட திறந்த குத்துச்சண்டை போட்டியில் யாழ் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த குணசேகரம் குணசோதி, போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
முல்லைத் தீவு வித்தியானந்தா கல்லூரி (தேசிய பாடசாலை) குத்துச் சண்டைத் திடலில் போட்டிகள் நடைபெற்றது.
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியின் இறுதிப் போட்டிகள் 25.01.2018 அன்று இடம்பெற்றது.
பெண்கள் பிரிவில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தையும், ஆண்கள் பிரிவில் 5 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்று யாழ் மாவட்டம் பெற்றுள்ளது.
தேசிய மட்டப்போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.