வல்வை நகரசபை உறுப்பினர் திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் இன்று காலமானார். இவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
எதிர்வரும் 4 மாதங்களின் பின்னர் இடம்பெறவுள்ள நகரசபைத் தலைவர் தெரிவில் இடம்பெறவுள்ளவர்களில் இவரும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தார்.
பொதுச் சேவைகள் பலவற்றில் ஈடுபட்டுவந்த இவர், கடந்த காலங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கத்துடன் சேர்ந்தும் பல போராட்டங்களில் பங்குபற்றிவந்தார். வல்வை ஊரணி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்திலும், வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திலும் இவர் கடந்த பல வருடங்களாக சேவையாற்றி வந்தார்.
அத்துடன் வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பல பொறுப்புக்களில் கடந்த பல வருடங்களாக சேவையாற்றிவந்ததுடன், வல்வை சனசமூக சேவா நிலையத்துடன் நெடிய காலம் பயணித்த வந்த ஒருவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: January 10, 2022 at 09:38
பொ.சிவஞானசுந்தரம் (சிவா) அவர்களின் ஆத்மாவிற்கு எமது அஞ்சலி
சிவா அவர்கள் தமிழ் கூட்டமைப்பு சார்பில் (தமிழரசுக்கட்சி சார்பில்) வெற்றி பெற்று நகரசபை உறுப்பினர். ஆரம்பத்தில் தனது பொதுச் சேவையை வல்வை சனசமூகநிலையம், வல்வை வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம், சிதம்பரா பழைய மாணவர் சங்கம், மாலுமிகள் நலன்புரிச்சங்கம் போன்றவற்றில் தொண்டாற்றினார். வளர்ந்து வந்த அரசியல்வாதியை வல்வை இழந்து விட்டது. இவர் பிரவால் துயுருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள்.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 09, 2022 at 05:01
ஆழ்ந்த இரங்கலும் அகவணக்கமும்
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: January 08, 2022 at 06:00
I’m very saddened to hear the news of Our Brother Sivagnanasuntharam Anna passing away.
He is a well-known and well-respected Social Volunteer and Politician in our Valvettiturai Metropolitan.
He worked very hard for the progress of our city dwellers.
.
I pay my tearful tribute to our Brother Sivagnanasuntharam Anna.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
May our Mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest Our Brother Sivagnanasuntharam Anna in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.