வல்வெட்டித்துறை பிரதேச எல்லைக்கு உட்பட்ட வீரர்களுக்கான VSPL (Valvettithurai super premier league) மென்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகவுள்ளதால் இதில் பங்குகொள்ளும் வீரர்களுக்கான பதிவுகள் 22/02 (சனி) மாலை 3:30 -6:00 மணி வரையும் 23/02 (ஞாயிறு) காலை 9:00 - மாலை 6:00 மணி வரையும் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது.
120 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
இதே வேளை VSPL (Valvettithurai super premier league) மென்பந்தாட்ட தொடரின் அங்குரார்பண நிகழ்வும் 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் VSPL குழுமத்தினருக்கிடையிலான கலந்துரையாடலும் நேற்றைய தினம் காலை 10:30 மணி தொடக்கம் மதியம் 12:00 மணிவரை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.