வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட தொடரின் (2 ஆம் வருடம்) இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சைனிங்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் திரு.க.பரமநாதன் தலைமையில் போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமாகின.
நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் மு.தங்கவேல் அவர்களும் சிறப்பு விருந்தினராக சைனிங்ஸ் விளையாட்டுக்கழக சுவிஸ் இணைப்பாளர் தி.ஜெயசிகாமணி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மென்பந்தாட்டம் - ரெயின்போ வெற்றி
மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரெயின்போ விளையாட்டுக் கழகம் மோதி, வெற்றி சுழல் கிண்ணத்தை ரெயின்போ மீண்டும் இரண்டாவது தடவையாகக் கைப்பற்றியது. இப்போட்டிகளின் ஆட்ட நாயகனாக ருதேசனும் (ரெயின்போ), தொடர் ஆட்ட நாகனாக பிரகலாதனும் (ரெயின்போ) அதிக விக்கற்றுக்கள் பெற்ற வீரராக உலகராசா (ரேவடி) தெரிவாகியிருந்தனர்.
உதைபந்தாட்டம் - இளங்கதிர் வெற்றி
உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டத்தின் முடிவில் 2 அணிகளும் சமநிலை பெற, ஆட்ட முடிவைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் வெற்றி சுழல் கிண்ணத்தை இளங்கதிர் மீண்டும் இரண்டாவது தடவையாகக் கைப்பற்றியது. இப்போட்டிகளின் ஆட்ட நாயகனாக பிரசாந்த் (இளங்கதிர்), தொடர் ஆட்ட நாகனாக கபிலன் (இளங்கதிர்) மற்றும் சிறந்த கோல் காப்பாளராக பிரேம்ராஜ் (ரேவடி) ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.
போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வின் காட்சிகளை கீழ்வரும் எமது Valvai Inaiyam Facebook இணைப்பில் பார்வையிடலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.