VVT Boys இன் மர்மம் ஓர் அடுத்த பாய்ச்சல் .இவர்களின் முன்னைய படைப்பை விட இதில் இன்னும் மெருகேற்றி உள்ளது சிறப்பு . வழமையான பேய் கதையில் தற்போது ஈழத்தில் பரவும் போதை பொருள் பழக்கத்தை புகுத்தி பேய் கதையில் ஓர் சமுதாய பார்வையை காட்டியிருப்பதுசிறப்பு அதுவே இயக்குனரின் வெற்றியும் ஆகும்.ஒரு சிலரை தவிர அநேகரின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது வாழ்த்துக்கள்.
மொழியில் சற்று இந்திய கலப்பு இருந்தது நெருடலாக இருந்தது. அது தவறில்லை இருப்பினும் தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஒளிப்பதிவு சிறப்பு. ஒளித்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது .இசை பிரதி செய்யப்பட்டது என்றாலும் அதனை சரியாக பயன்படுத்தி படத்துக்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் ரசிக்க வைக்குறது. மொத்தத்தில் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள். மிக மிக குறைந்த செலவில் தங்களிடம் இருக்கும் வளங்களை மட்டுமே நம்பி மர்மம் என்ற ரசிக்க வைக்கும் படைப்பை கொடுத்தமை பாராட்டுக்குரியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.