உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வர்த்தமானி அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பணி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரி வர்த்தமானி நேற்று கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு வர்த்தமானி அச்சிடப்படவுள்ளதாகவும் 8356 உறுப்பினர்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.