வலைப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)
வடமராட்சி கல்வி வளைய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதிற்குட்பட்டோருக்கான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளிர் கல்லூரி அணி வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டது.
கடந்த வியாழக்கிழமை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்ப முதல் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் வல்வை மகளிர் கல்லூரி அணி 27:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.