வல்வை நகர சபைக்கான செல்வேந்திராவின் சுயேட்சைக் குழு வேட்புமனு தாக்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2017 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு நேற்றுக் காலை 9 மணியளவில், யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.
செல்வேந்திராவுடன் இச்சுயேட்சைக் குழுவில் செயலாளராகச் செயற்படும் முன்னாள் வங்கியலாளரான கோபாலசாமி சற்குணபாலனுடன் இச்சுயேட்சைக் குழுவின் முதலாவது பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண் வேட்பாளரான பிறேமதாஸ் ஞானேஸ்வரி உள்ளிட்டோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
முருகுப்பிள்ளை ஆனந்தராசா, சபாரத்தினம் ஜெயகணேஸ், குணரட்ணம் சத்தியசீலன் உள்ளிட்ட வேட்பாளர்களுடனும் ஊர் பிரமுகர்களுடனும் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.