சிதம்பரா தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபா செலவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட கட்டடப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத்திய அரசினால் மாகாண சபைக்கு அனுப்பிய நிதியின் தாமதம் காரணமாக கட்டிட ஒப்பந்தகாரர்களுக்கு நிதி வழங்குவதில் ஏற்ப்பட்ட தாமதமே இந்த பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகின்றது.
கடந்த சில தினங்கள் முன்பு வடமாகாண சபையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு ரவீந்திரன், கட்டிட ஒப்பந்தகாரர் திரு.சந்திரு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் இடம்பெற்ற சிதம்பர கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தாமதப்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்ப ஆய்வுகூட கட்டிட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து தருமாறு கல்லூரி அதிபர் திரு.குருகுலலிங்கம் அவர்கள் தனது உரையில் திரு.சிவாஜிலிங்கம் அவர்களைக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.