5 வருடங்களில் யாழில் குடிநீர் இல்லாது போகும் கடலில் முழ்கும் அபாயமும் உள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017 (வெள்ளிக்கிழமை)
புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ் குடாநாடு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு கடல் நீர் மட்டம் 5 அடி உயரத்துக்கு அதிகரித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தொடரும் ஆடை மழை காரணமாக இந்நிலை ஏற்ப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாழ் குடாநாடு ஆபத்தான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக துறைசார் அறிஞர்கள் மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ் குடாநாடு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவத்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் புவியியல் போராசிரியருமான செனவி எப்பிடவத்த எச்சரித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இவ்வாறான எச்சரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது,எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணத்தின் சுத்தமான குடிநீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இதன் மூலம் விவாசயத்துறையில் பாரிய சரிவு ஏற்படக்கூடும் என போராசிரியர் குறிப்பிட்டுள்ளார். யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்கு பதிலாக கடல் நீரை குடிக்க நேரிடும். சில சந்தர்ப்பங்களில் யாழ் குடாநாடு கடலில் மூழ்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த அபாயத்திற்கான ஆரம்பம் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முழுவதும் உள்ள சுண்ணாம்பு தட்டுக்கள் கரைய ஆரம்பித்துள்ளன. அத்துடன் அது கடலுக்குள் செல்வதனால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுகிறது. மக்கள் நிலத்தடி நீரினை பயன்படுத்தும் அளவிற்கு சமமான அளவு கடல் நீர் சாதாரண நீருடன் கலக்கப்படுகிறது. இதனால் இவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேராசிரியர் செனவி எப்பிட்டவத்தை குறிப்பிட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.