அக்கரைப் பகுதியில் கடை உடைத்து திருட முற்பட்ட சிறுவர்கள் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் கடை ஒன்றை உடைத்து பொருட்களை திருட முற்பட்ட சிறுவர்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் பிடித்து அச்சுவேலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலில் குளிப்பதற்கு வந்த இரு சிறுவர்களும் அப்பகுதியில் பூட்டப்பட்டிருந்த கடையை உடைப்பதை அங்கு நின்றவர்கள் அவதானித்தனர். இதனை அடுத்து இரு சிறுவர்களையும் அழைத்து அவர்கள் விசாரித்தனர்.
இருவரும் தாம் புத்தூரை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். பின்னர் இவ்விருவரும் போலீசாரிடம் கையளிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.