கப்பல் வாங்கவந்தவர்கள், கணிதம் வாங்க வந்தவர்களாக……
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2017 (சனிக்கிழமை)
அன்று மாசி மாதம் 10ம் நாள் 2017,
யாழில் இருந்து வந்த 751 பஸ்ஸில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மதவடியை நோக்கி நடக்கிறார்.
அவரது கையில் சில காகிதத்தாள்கள்.
1915ம் ஆண்டு வல்வை சந்தியில் வந்திறங்கிய முதியவர் ,ரேவடி கடற்கரை நோக்கி விரைவாக நடக்கிறார். அவரது கையில் பண முடிச்சு.
இரண்டு சம்பவங்களுக்கும் நூற்றாண்டு கால இடைவெளி உண்மை சம்பவங்கள்.
பஸ்ஸில் இருந்து வந்தவர் முன்னால் வந்த ஒருவரை மறித்து கணிதப்போட்டிக்கு எனது மகள் பங்கு பெற வேண்டும் யாரிடம் விண்ணப்பங்கள் கையளிப்பது என்று வினாவினார்.(உண்மை சம்பவம்)
ரேவடி ஒழுங்கையால் நடந்த முதியவர் "எனக்கு 85 அடி நீளமான கப்பல் வேண்டும்" என்று பக்கத்தில் நின்றவருடன் கதைத்து கொண்டு இருந்தார்.
அன்று கப்பல் கட்டும் தொழிலின் மையப்புள்ளியாக இருந்த வல்வெட்டித்துறை இன்று நூற்றாண்டுகள் கடந்து கணிதத்தின் மையப்புள்ளி ஆகி உள்ளது.
கப்பல் மூலம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இலங்கை முழுவதும் உணவு வினியோகித்த வல்வையில் இன்று கணிதம் விழையும் பூமியாகியுள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள்.ஆனால் வல்வை கரையில் ஓயாது அடித்துக்கொண்டிருக்கும் அலைகளில் மாற்றமில்லை.
மாற்றங்கள் தேடி ஓடித்திரிந்த மாணவர்களை கணிதம் மூலம் இணைக்க முடிந்தது.
வெல்வெற் இறங்கிய துறை வல்வெட்டித்துறை ஆனது.
யார்கண்டார் இன்னும் ஐந்நூறு ஆண்டுகளில் "கணிதத்துறை" என்று பெயர் மாற்றம்மடைந்தாலும் ஆச்சரியம் இல்லை...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.