நாளைய சித்திரப்புதுவருடப் பிறப்பையொட்டி வழங்கப்படும் மருத்துநீர்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2017 (வியாழக்கிழமை)
நாளைய தமிழர் திருநாள் சித்திர புது வருடத்தையொட்டி தமிழர் வாழும் பகுதிகளின் பல இடங்களிலும் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது.
கீழே வல்வை சிவன் ஆலய பூசகர் வீட்டில் மருத்து நீர் வழங்கப்படுவதை காணலாம்.
இந்துப் பாரம்பரியத்தில் புனிதம் நிறைந்த மருத்து நீர்
சித்திரைப் புது வருடப் பிறப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தமிழ்ப் பஞ்சாங்கங்கள் சித்திரை மாதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன. சித்திரை வருடப் பிறப்பன்று ‘மருத்துநீர்’ தேய்த்து நீராடுதல் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் ஆகும்.
புத்தாண்டில் சகல துன்பங்களும் விலகி மகிழ்ச்சியான வாழ்வு மலரப் பிரார்த்தனை செய்து, குடும்ப மூத்தோரால் அல்லது குருவால் குடும்ப உறவுகளுக்கு தலையில் வைக்கப்படும் புனித நீரை “மருத்துநீர்” என்பார்கள்.
மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும்.
மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.
தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.