சைனிங்ஸ் கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது றெயின்போ அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2017 (சனிக்கிழமை)
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் A பிரிவிற்கான அரையிறுதியாட்டத்தில் நேதாஜி அணி, றெயின்போ அணிகள் மோதின.
முதலில் ஆடிய நேதாஜி அணி 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது நேதாஜி சார்பாக பிரதீஸ் 21 பிரபு 12 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். றெயின்போ அணி சார்பாக பந்துவீச்சில் ருதேஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றி இலக்கை நோக்கி ஆடிய றெயின்போ அணி இறுதிப்பந்தில் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. றெயின்போ அணி சார்பாக ஜெகன் 19 ஓட்டங்களை பெற்றார் . நேதாஜி சார்பாக பிரதீஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . றெயின்போஅணி 1 விக்கெட்டால் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் சைனிங்ஸ் B, றெயின்போ அணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.