தொண்டைமானாறு செல்வசந்நிதி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஞானச்சுடரின் வாசகர்கள் போட்டிகளுக்கான வினாக்கள் கார்த்திகை மாத ஞானசுடரில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ் வாசகர் போட்டிகளுக்கான விடைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வாசகர் போட்டிக்குழு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை செல்வசந்நிதி தொண்டைமானாறு என்ற விலாசத்திற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்.
போட்டியில் எவரும் பங்குபற்றலாம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை அனுப்பும் பொழுது தனித் தனியே அனுப்ப வேண்டும்.
வினாக்கள் 2016 தை மாதம் தொடக்கம் ஜப்பசி மாதம் வரை வெளிவந்த ஞானச்சுடர் மலர்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதால் விடைகளும் மலருக்குள்ளேயே எடுக்கப்பட வேண்டும்.
போட்டியின் பெறுபேறுகள் தைமாத ஞானச்சுடரில் வெளியிடப்படும். பரிசில்கள் மாசி மாத ஞானச்சுடர் வெளியீட்டின் போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.