இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - பருத்தித்துறை தொகுதியில் நிதர்சன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2016 (திங்கட்கிழமை)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளாலும், யாழ் மாவட்டத்தில் மூன்றாவது விருப்பு வாக்குகள் வித்தியாசத்திலும் அபார வெற்றியடைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு உதயகுமார் நிதர்சன் தெரிவாகியுள்ளார்.
வாக்களித்த இளைஞர் யுவதிகள் மற்றும் எனது வெற்றிக்கு அயராது உழைத்த ஆதரவாளர்கள் நண்பர்கள் உறவினர்கள் இளைஞர் கழக அங்கத்தவர்கள் ஊடகங்கள் என அனைவருக்கும் தனிப்பட்ட சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து என்றும் உங்களில் ஒருவனாக இருந்து அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் சேவைகளை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன் என்று உதயகுமார் நிதர்சன் கூறியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.