வடமாகாணத்தின் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆறு பாடசாலைகளில் தொழிழ்நுட்ப பீடம் அமைக்கப்படவுள்ளது. இம்மூன்று மாடி தொழிழ்நுட்ப பீடங்கள் யாழ்ப்பாணத்தில் யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிககல்லூரி, மன்னாரில் மன்னர் சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் இந்துக்கல்லூரி, முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மற்றும் வவுனியா சிவபிரகாசம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ளது.
இத் தொழிழ்நுட்ப பீடம் ஒவ்வொன்றிற்கும் தலா 24 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளதுடன் இதற்குரிய ஆரம்ப கட்ட வேலைகளை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (வீரகேசரி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.