வெளியில் தொழில் புரிவோருக்கும் உள்ளூரில் தொழில் புரிவோருக்கும் இடையில் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2016 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்தின் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் தொழில் புரிவோருக்கும்(Valvai Domestic Players), வெளிநாட்டில் தொழில் புரிவோருக்குமிடையில் (Valvai Abroad Players) நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புரீதியிலான எட்டு வீரர்கள், 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டப் போட்டியில் வல்வை வெளிநாட்டில் தொழில் புரிவோர் அணியினர் 03 இலக்குகளால் வெற்றி பெற்றனர்.
வல்வை றெயின்போ மைதானத்தில், ஸ்ரீ கரனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற போட்டியில், இலங்கையில் தொழில் புரிவோருக்கான அணிக்கு பிரணவனும், வெளிநாட்டில் தொழில்புரிவோர் அணிக்கு ருதேஷா அவர்களும் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.