பொலிகண்டி சிமாட்போய்ஸ் விளையாட்டுக்கழக அங்குராப்பணத்தை முன்னிட்டு நேற்று நடாத்தப்பட்ட அணிக்கு 9 நபர்கள், 6 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினை சுவீகரித்துள்ளது.
காலுறுதிப் போட்டியில் நெடியகாடு இளைஞர் வல்வை விளையாட்டுக்கழகத்தினை 6 இலக்குகளாலும், அரையிறுதிப்போட்டியில் கொம்மந்தறை வல்வை விளையாட்டுக்கழகத்தினை 39 ஓட்டங்களாலும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தொண்டமனாறு ஒற்றுமை வல்வை விளையாட்டுக்கழகத்தினை எதிர் கொண்ட வல்வை வல்வை விளையாட்டுக்கழகம் 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
தொடராட்ட நாயகனாக வல்வை அணியின் தலைவர் பிரணவன் தெரிவுசெய்யப்பட்டடார் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.