நெடியகாடு வி.கழகத்தை சேர்ந்த குணசோதி மாகாண மட்ட குத்து சண்டைப்பிரிவில் தங்கப் பதங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)
மாகாண மட்ட குத்து சண்டைப்பிரிவில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.குணசோதி 56 கிலோ எடைப்பிரிவில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்து சண்டைப் போட்டிகள் முல்லைத் தீவில் அண்மையில் நடைபெற்றிருந்தன. அத்துடன் மாகாண மட்ட குத்துச் சண்டையில் யாழ் மாவட்டம் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதங்கங்களுடன் முதலிடத்தைப் பெற்று சம்பியனானது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (denmark)
Posted Date: September 02, 2016 at 21:57
வல்வையில் ஒரு குத்துச்சண்டை வீரன் தங்கப்பதக்கத்துடன் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்.. வாழ்த்துக்கள்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.