கம்பிகளின் மொழி பிரேமின் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெற்ற போது பிரேம் ஆற்றிய உரை சரியான முறையில் உலகத்தின் பல பாகங்களில் உள்ள வல்வை சங்கங்களுக்கு போய் சேரவில்லை.
அதனால் உலகம் முழுவதும் பரவி வாழும் வல்வை மக்களின் பார்வைக்காக இந்த ஆக்கத்தை எழுதுகிறேன்.
போரினால் பாதிக்கப்பட்டு, பெரும் பொருளாதார நெருக்கடியிலும் கவிதையால் தன் உணர்வுகளை மக்களுக்கு தந்த அவருடைய பணிக்கு சரியான முறையில் வெளி நாடுகளில் இருந்து கரம் கொடுக்கப்படவில்லை.
பாலை வனத்தில் ஒரு ரோஜா போல கவிதைத் தொகுதி ஒன்று வெளியாகியிருக்கிறது, நேற்று அவருக்கு போன் செய்து வல்வை ஒன்றியத்திடம் ஏதாவது உதவி கோரினீர்களா என்று கேட்டேன் முன்னர் ஒரு தடவை வல்வை ஒன்றியத்தின் ஆதரவை அவர் கோரியும் கிடைக்கவில்லை என்று அறிந்தேன்.
அதன் காரண காரியங்கள் தெரியவில்லை.. டென்மார்க்கில் இருந்தே இப்போது வல்வை ஒன்றியத்திற்கு பணம் அனுப்பப்படுவதில்லை என்பதால் வல்வை ஒன்றியத்தை கேள்வி கேட்க என்னால் முடியவில்லை. நிதி இருக்கிறதா தெரியவில்லை.. இருப்பினும் வல்வை ஒன்றியத்தை உருவாக்கியவர்களில் ஒருவனான எனக்கு இதைக் கேட்டபோது மனது சங்கடமாக இருந்தது.
வெளிநாடுகளிலோ வல்வைக்கு உதவ வேண்டியதில்லை இங்கிருக்கும் வல்வையரை ஒன்றுபடுத்தி ஒன்று கூடல் நடத்தலாம் என்ற கருத்து இப்போது சிலரிடையே நிலவுகிறது.
அந்தக் கருத்து எவ்வளவு தவறான கருத்து என்பதை இன்று உணர்கிறேன்.
ஒரு கையையும் ஒரு காலையும் இழந்தும் தளராத ஒரு கவிஞனை நாம் கண்டு கொள்ளாமல் விட்டோமே என்பதை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவித்தேன்.
வல்வை மண்ணில் யார் ஒரு நூலை வெளியிட்டாலும் அதற்கு உலகம் முழுவதும் வாழும் வல்வை மக்களின் சார்பில் ஒரு தொகை பணத்தை மானியமாக வழங்க வேண்டும்.
குறைந்தபட்சம் 10.000 ரூபா ஆவது வழங்கவேண்டும், இல்லையேல் படைப்பிலக்கியத்தை ஊக்க முடியாது.
வல்வையில் கல்வியை வளர்த்தால் மட்டும் போதாது, விளையாட்டை வளர்த்தால் மட்டும் போதாது கவிஞர்கள், கலைஞர்களையும் வளர்க்க வேண்டும்.
உலகம் முழுவதும் இருக்கும் வல்வை ஒன்றியங்கள், வல்வை நலன்புரிச் சங்கங்கள் இதைக்கண்டு கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் வல்வையில் பந்தடியாதோர் சங்கமென ஒரு சங்கம் இருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
படிப்பும் பந்தடியும் மட்டும் உதவிக்குரியதல்ல இதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள வல்வை மக்கள் தமது பிரதிநிதி மூலம் பகிரங்கமாக ஒரு தொகை பணத்தை வழங்கும் புதிய ஏற்பாட்டை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன்.
இதை செய்யாமல் வீண் ஊர் பெருமை பேசி பயன் எதுவும் கிடையாது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
prem (12)
Posted Date: August 23, 2016 at 01:02
tx
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.