குரும்பைக்கட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான Cricket league ஆட்டதில் வல்வை விளையாட்டுக் கழகம் நெல்லை ப்லச்டேர்ஸ் (Nellai blasters) விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை விளையாட்டுக் கழகம் 10 over முடிவில் 63 ஓட்டங்களைக் குவித்தது. வல்வை விளையாட்டுக் கழகம் சார்பாக பிரதீப் அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றார். 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மேலும் மணிமாறன், ருதேசா , மற்றும் கபிலன்ஆ கியோரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருந்தனர்.
64 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Nellai blasters அணி 10 ஓவர் நிறைவில் 53 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுகொண்டது. பந்து வீச்சில் றொசான் 4 .ருதோசா 3 இலக்குகளை கைப்பற்றினார்.
இப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. லீக் ஆட்டங்களில்ஐ ந்து போட்டிகளில் நான்கு போட்டிலில் வெற்றி பெற்று காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை அணி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.