சிறப்புச் செய்தி - வல்வை சிவன் கோவில் கோபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2012 (திங்கட்கிழமை)
இலங்கையில் எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சமாக, வல்வை சிவன் கோவில் கோபுரத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை பதிக்கபட்டுள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
படத்தில் வல்வை சிவன் கோவில் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில், மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவச் சிலையைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.