நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி துப்பாக்கி சுடும் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா செல்லத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2014 (வெள்ளிக்கிழமை)
இலங்கைப் பாடசாலைகள் துப்பாக்கி சுடும் விளையாட்டுச் சங்கத்தினால் நடாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுக் கொண்ட யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு மேலதிக பயிற்சிகளைப் பெறுவதற்காக ஜக்கிய அமெரிக்கா செல்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 6 பேர் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் அணியில் இடம்பெறும் ஒரே ஒரு தமிழ் மாணவ வீராக்கனை இவராவார்.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறவுள்ள தேசிய அணி வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்காக இவருக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் மற்றொரு வீராங்கனையான செல்வி.பிரதீபா குமாரவேல் என்பவரும் எதிர்வரும் நவம்பர் மாதம் போலந்து நாட்டில் நடைபெறவுள்ள பாடசாலை மட்ட சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கு பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ratha (srilanka)
Posted Date: November 04, 2014 at 13:17
Very good.congratulations for thayani
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.