Rio de Janeiro விமான நிலையத்தில் விமானங்கள் ஏறும், இறங்கும் காணொளிகளின் தொகுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2016 (புதன்கிழமை)
காணொளியில் காணப்படுபவை பிரேசில் நாட்டின் தலைநகரான Rio de Janeiro விமான நிலையத்தில் பல விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் காட்சிகளின் தொகுப்பு ஆகும்.
காணொளியில் உலகின் பிரசித்திபெற்ற றியோ டி ஜெனிரோ ஜேசுநாதர் சிலையையும் (Rio de Janeiro Jesus statue) , றியோ டி ஜெனிரோ துறைமுகத்தின் (Port of Rio de Janeiro) ஒரு பகுதியையும், றியோ டி ஜெனிரோ நகரின் ஒரு பகுதியையும் காணலாம்.
இந்தக் காணொளிகள் எம்மால் காட்சிப்படுத்தப்பட்டவையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: November 03, 2016 at 02:06
தரையிலிருந்து விமானங்கள் வானுக்கு தாவுவதையும்
வானில் பறந்துகொண்டிருந்த விமானங்கள் மண்னை முத்ததமிடும் காட்சிகளையும் மிகவும் அழகாக படம்பிடித்துள்ளீர்கள்.
பார்ப்பதற்கு ஒரே பரவசமாகவுள்ளது.
.
அதுமட்டுமல்ல
பிறேசில் நாட்டில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பின்னணியில் அமைந்துள்ள அலைகள் தவழும் கடலின் அழகையும் இயற்கை எழில்கொஞ்சும் மலைகளின் அழகையும் செயற்கை அழகுசொட்டும் அழகான கட்டிடங்களையும் அற்புதமாக படமாக்கியுள்ளீர்கள்.
.
ஒருகட்டத்தில் விமானம் ஒன்று கடலில் தரித்துநிற்கும் கப்பலுக்குமேலாக கப்பலை உரசிக்கொள்ளுமாற்போல் பறந்துபோகிறது.
இந்தக்காட்சியைப்பபார்க்கும்போது
.
தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகைப்போல் அந்த விமானம் கப்பலின்மீது தவழ்ந்து செல்கிறதோ எனஎண்ணத்தோன்றுகிறது.
.
ஆங்காங்கே ஒருசில இடங்களில் ஒருசில குறைகள் தென்பட்டாலும்
ஒட்டுமொத்தமாக படப்பிடிப்பு அத்தனையுமே அருமையாகவுள்ளது.
.
உங்களது படப்பிடிப்பில் ஒரு கைதேர்ந்த திரைப்பட ஒளிப்பதிப்பாளரின் தரம் தெரிகிறது.
அவர்களிடமுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உங்களிடமிருந்தால் இதைவிட பிரமாதமாக சாதித்திருப்பீர்கள்.
ஒளிப்பதிவில் அதிககவனம் செலுத்திய நீங்கள். ஒலிப்பதிவிலும் ஓரளவு கவனம் செலுத்தியிருக்கலாம்.
விமானநிலையத்தில் வீசும் காற்றின் இரைச்சல் சிறிது சங்கடத்தை தருகிறது. அந்த இரைச்சலை அழித்துவிட்டு மென்மையான மெல்லிசையை இழையோட விட்டிருக்கலாம். மனதுக்கு இதமாக இருந்திருக்கும்.
.
படப்பிடிப்புக்கலையில் நீங்கள் மேலும் பல அரிய சாதனங்களை செய்து உங்களது இந்த விமானங்கள் வானில் பறந்து விண்னை முட்டுவதைப்போல
உங்களது புகழும் விண்னை முட்டவேண்டுமேன வாழ்த்துகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.