வல்வெட்டி ஒற்றுமை விகழக மென்பந்தாட்டம் - அரையிறுதிக்கு முன்னேறியது வல்வை அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2022 (சனிக்கிழமை)
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையே மென்பந்தாட்ட தொடரொன்றினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (16/04/2022) இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கொம்மந்துறை இளைஞர் விளையாட்டுக்கழமானது மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. வல்வை அணி சார்பாக அனுபவ வீரர் ருதேஷா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 33 ஓட்டங்களையும், கபிலன் 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 24 ஓட்டங்களையும், ரஞ்சித் 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
88 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொம்மந்துறை இளைஞர் அணியானது தர்ஷன், றொசான, கபிலன் ஆகியோரின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 58 ஓட்டங்களிற்குள் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
வல்வை அணிசார்பாக அபாரமாக பந்துவீசிய தர்ஷன் 1.5 பந்துபரிமாற்றங்களை வீசி வெறும் 6 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மேலும் ரொசான் 2 பந்துபரிமாற்றங்களை வீசி 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், கபிலன் 2 பந்துபரிமாற்றங்களை வீசி 10 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
வல்வை அணியானது 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய கபிலன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.