வல்வை விளையாட்டுக்கழகம் 60 ஆவது ஆண்டு நிறைவினை( வைரவிழா) முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் (08/04/2022) இடம்பெற்ற ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நெடியகாடு விளையாட்டுக்கழகம் மோதியது. போட்டியில் 8 : 1 என்ற கோல்கணக்கில் பலாலி விண்மீன் அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. விண்மீன் அணிசார்பாக றெனோஜன் 4 கோல்களினையும், அருள்தாசன், கன்மொரிசியஸ், உதயதாஸ், ரஜிகரன் தலா 1 கோலினையும் பெற்றுக்கொடுத்ததோடு நெடியகாடு அணிசார்பாக நிதுஷன் 1 கோலினை பெற்றுக் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பலாலி விண்மீன் அணியின் முன்கள வீரர் றெனோஜன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.