தேசிய மட்ட வாசிப்பு மாதம் தொடர்பிலான போட்டியில் யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வி.சிந்துஜா ரங்கேஸ்வரன் தேசிய மட்டத்தில் “பிளாட்டினம்” பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
“நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்” என்னும் தலைப்பின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட வாசிப்பு மாதம் தொடர்பான போட்டி நடைபெற்றது.
இதில் யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை தரம் 9 (2018) வகுப்பு மாணவி செல்வி.சிந்துஜா ரங்கேஸ்வரன் தேசிய மட்டத்தில் “பிளாட்டினம்” பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டிகளுக்கான பெறுபேற்றுச் சான்றிதழ் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.