வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் இன்று தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
3ஆம் இடத்திற்கான போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து திருவில் விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டத்தில் தீருவில் விளையாட்டுக்கழகம் 3/1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது
இறுதிப்போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டத்தில் 3/3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன் காரணமாக நடுவார்களால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் - பிரசாந் - சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்
தொடர் ஆட்டநாயகன் -தர்ஷன் - நேதாஜி விளையாட்டுக்கழகம்
சிறந்த கோல்காப்பாளர் - ஜெயசந்திரன் - சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்வளர்ந்து வரும் வீரர் - சதன் - திருவில் விளையாட்டுக்கழகம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.