ஊடக கற்கைகள் உயர் டிப்ளோமா (Higher Diploma in Media Studies) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
கலைப்பீடம்
ஊடகக் கற்கைகள் துறை
ஊடகக் கற்கைகள் உயர் டிப்ளோமா கற்கைநெறி
(பகுதி நேரம் – இரண்டு ஆண்டுகள்) கல்வியாண்டு – 2020 / 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படுகின்ற ஊடகக் கற்கைகள் உயர்; டிப்ளோமா (பகுதி நேரம் – இரண்டு ஆண்டுகள்) பயிற்சிநெறிக்கான 2020 / 2021 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இதற்கான அனுமதிக்காகத் தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கற்கை நெறிக் காலம் : 2 ஆண்டுகள் (பகுதி நேரம்) – (வார இறுதி நாட்கள்)
கற்பிக்கப்படும் மொழி : தமிழ்
விண்ணப்பிப்பதற்கான தகுதி : க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எப்பிரிவிலிருந்தும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடனாக (Yes) சித்தி பெற்றிருக்க வேண்டும்.
கற்கைநெறிக் கட்டணம் – ரூபா 80,000.00 (வருடம் ரூபா 40,000.00)
பதிவுக் கட்டணம் – ரூபா 750,00
நூலக வைப்புக் கட்டணம் – ரூபா 750.00(மீளளிக்கத்தக்கது)
நூலகப் பயன்பாடு – ரூபா 1,000.00
விண்ணப்ப முடிவுத் திகதி : 31.01.2020
விண்ணப்பிப்பதற்கான முறை :
விண்ணப்ப கட்டணமாக ரூபா 500/- இனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளை, கணக்கு இல. 162-1-001-8-0000902 இலோ அல்லது யாழப்பாணப் பல்கலைக்கழக காசாளர் கரும பீடத்திலோ செலுத்திய பற்றுச்சீட்டைச் சமர்ப்பித்து விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்படிவங்களைப் பெற விரும்புவோர் சுய முகவரியிடப்பட்ட ரூ.15/- விற்கான முத்திரை ஒட்டப்பட்ட தபால் உறையுடன் பற்றுச்சீட்டையும் இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்திசெய்த விண்ணப்பப் படிவங்களைத் தபால்மூலம் கலைப்பீடப் பீடாதிபதி, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் முகவரிக்கு, கடித உறையின் இடது பக்க மேல்மூலையில் ‘ஊடகக் கற்கைகள் உயர் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம்’ எனக் குறிப்பிட்டு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவும்.
விண்ணப்ப முடிவுத்திகதியின் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும், தெளிவாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்பதனைக் கவனத்திற் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.