அம்பலப் பெருமாள் குளம் பாடசாலைக்கு வல்வை 21 நண்பர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)
வல்வை 21 நண்பர்களின் ஊடாக லண்டனில் இயங்கும் New Grace Ministries மற்றும் Sponsored by "Gravitate Project Ahava" எனும் அமைப்பினால் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கிராயன் கிராமத்தில் அமைந்துள்ள அம்பலப் பெருமாள் குளம் அ.த.க பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது.
மிகவும் பின்தங்கிய, அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலையான அம்பலப் பெருமாள் குளம் அ.த.க பாடசாலையில் தரம் 1இலிருந்து 5 வரையான வகுப்புக்களில் 30 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இம் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணம், கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலைக்கு தேவையான அலுமாரி போன்ற அடிப்படை வசதிகள் வல்வை 21 நண்பர்களால் வழங்கப்பட்டது. சுமார் 400,000/- பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.